விளையாட்டு

கோவா அணிக்கு 3-வது வெற்றி

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எப்சி - எப்சி கோவா அணிகள் மோதின. 50-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஷெய்ட் யாசென் இந்த கோலை அடித்தார்.

அடுத்த 12-வது நிமிடத்தில் கோவா பதிலடி கொடுத்தது. அந்த அணியின் ராபின் சிங் கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. கடைசி நிமிடத்தில் கோவா அணியின் பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதனால் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.

இன்று இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - கேரளா அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT