சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு, முதல் திருமணம் முறிவு ஆகியவற்றால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
45 வயதான பிராட் ஹாக் “The Wrong ‘Un” என்ற தனது சுயசரிதையில், “ஒருநாள் போர்ட் கடற்கரை பகுதிக்கு காரில் சென்றேன். காரை நிறுத்தி விட்டு இருட்டு பகுதியை நோக்கி நடந் தேன். அப்போது கடல் அரிப்பு தடுப்பு கற்கள் வரை நீந்திச் செல்ல வேண்டும், திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் பிரச்சினை இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
விதிப்படி நடக்கட்டும் என முடிவு செய்து நான்கு முறை நீந்திச் சென்றேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது கடினமாக செய்ய வேண்டும் என நினைத் தேன். அப்போதுதான் சிந்திப் பதும், அதை செய்து முடிப்பதும் வேறுபட்ட விஷயங்கள் என்பது புரிந்தது. அதிர்ஷ்டவசமாக நான் பிழைத்தேன்” என கூறியுள்ளார்.