விளையாட்டு

மன்கட் அவுட் சர்ச்சை: இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தகவலுக்கு சார்லி டீன் மறுப்பு

செய்திப்பிரிவு

மன்கட் அவுட் சர்ச்சை விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்த கருத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன். இரு அணிகளுக்கும் இடையில் அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை இங்கிலாந்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீனை ‘மன்கட்’ முறையில் நான்-ஸ்ட்ரைக்கில் எண்டில் பந்து வீசுவதற்கு முன்னர் அவுட் செய்திருந்தார் தீப்தி. அது சர்ச்சையானது. கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் அது குறித்து தங்களது கருத்துகளை சொல்லி வந்த நிலையில் இந்த சர்ச்சையில் தொடர்புடைய தீப்தி சர்மா தனது கருத்தை தெரிவித்தார்.

“சார்லி டீன் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றார். அது குறித்து அவரிடம் எச்சரித்து இருந்தோம். ஆனால் அவர் அதனை திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு அவுட் செய்தோம்” என தீப்தி தெரிவித்திருந்தார்.

அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் சார்லி. “எனக்கு அது குறித்து எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இந்த முறையில் அவுட் செய்ய எந்தவித எச்சரிக்கையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி எதுவும் வீதிகளில் சொல்லவில்லை. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போது பேட் செய்பவர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT