விளையாட்டு

அகில இந்திய கூடைப்பந்து போட்டி

செய்திப்பிரிவு

மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கே.விஸ்வநாதன் நினைவு டிராபிக்கான அகில இந்திய கல்லூரிகள் இடையிலான இன்வைட்டேஷன் கூடைப்பந்து போட்டி (ஆடவர்) சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பங்கேற்கலாம். இந்தப் போட்டிக்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் வரும் 21-ம் தேதியாகும்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லூரிகள் தங்களுடைய அணியின் வீரர்கள் பெயர் பட்டியலோடு வரவேண்டும். வீரர்கள் பட்டியல் கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்டுள்ள படிவத்தில் (லெட்டர் ஹெட்) இடம்பெற வேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மகேந்திரன் நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் நிஸ்ஸாரை (9840111199) தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT