விளையாட்டு

ஹாக்கி இந்தியாவின் தலைவராக போட்டியின்றி திலீப் திர்கி தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலீப் திர்கி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹாக்கி இந்தியா அமைப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் எந்தவொரு பதவிக்கும் போட்டியாளர்கள் இல்லாததால் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி பதவிகளுக்கு விண்ணப்பித்த தற்போதைய வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்த மத்திய பிரதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் ராகேஷ் கத்யால், ஜார்க்கண்ட் மாநில ஹாக்கி சங்க தலைவர் போலா நாத் சிங் ஆகியோர் நேற்று தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். இதைத் தொடர்ந்து திலீப் திர்கி, போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போலா நாத் சிங், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

துணைத் தலைவர்களாக அசிமா அலி, எஸ்விஎஸ் சுப்ரமண்ய குப்தா, பொருளாளராக தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் சேகர் ஜே.மனோகரன், இணை செயலாளர்களாக ஆர்த்தி சிங்,சுனில் மாலிக் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, திலிப் திர்கி தலைமையிலான நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT