தேசிய ஹாக்கி மகளிர் சீனியர் அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பேன் என்று இந்திய ஹாக்கி வீராங்கனை மும்தாஜ் கான் தெரிவித்தார்.
இந்திய ஹாக்கி சம்மேளன ஸ்டார் விருது 2021-22-க்கான பட்டியலில் (எஃப்ஐஎச் ஸ்டார் விருது) வளர்ந்து வரும் வீராங்கனை பிரிவில் மும்தாஜ் கான் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மும்தாஜ் கான் கூறியதாவது: எஃப்ஐஎச் ஸ்டார் விருதுப் பட்டியலில் வளர்ந்து வரும் வீராங்கனைகள் பிரிவில் எனது பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய சீனியர் மகளிர் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. தொடர்ந்து தேசிய அணியில் இடம்பிடித்து நாட்டுக்காக விளையாட வேண்டும். நாட்டுக்காக பதக்கங்களை வெல்லவேண்டும். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.