விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிராக மோசமான சராசரி: மட்டையை சுழற்ற விராட் கோலிக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார். அதேவேளையில் பேட்டிங்கை அவர் அனுபவித்தும் விளையாடி வருகிறார். கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர் களை வென்றுள்ளது. இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மண்ணிலும், சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணி களுக்கு எதிரான தொடர்களையும் கோலி வென்று கொடுத்துள்ளார்.

இந்திய கேப்டன்களில் இருமுறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளார் கோலி. அவர் தலைமையில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 14 டெஸ்ட்டில் 10-ல் வெற்றி பெற்றுள் ளது. சமீபத்தில் நியூஸிலாந்து அணியை 3-0 என ஓயிட்வாஷ் செய்ததும் அதில் அடங்கும்.

இது எல்லாம் முடிந்த கதை. தற்போது கோலியின் முழுகவன மும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மீதுதான். முதல் டெஸ்ட் வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஆயத்த பணிகளை கோலி தொடங்கி உள்ளார்.

எல்லா நாடுகளுக்கு எதிராகவும் சீராக ரன் குவித்துள்ள கோலியின் மட்டை இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் இதுவரை வேகம் எடுக்கவில்லை. அந்த அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி 20.12 சராசரியுடன் 322 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதை வடிகட்டி பார்த்தால் நிலைமை கொஞ்சம் மோசம்தான். இங்கிலாந்து மண்ணில் கடந்த 2014-ல் இந்தியா 5 டெஸ்ட் போட் டிகள் கொண்ட தொடரில் விளை யாடியது. இதில் கோலி 10 இன் னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 134. சராசரி 13.4. அதிகபட்ச ரன்கள் 39.

சொந்த மண்ணிலும் இங்கிலாந் துக்கு எதிராக கோலியின் ஆட்டம் சற்று ஆட்டமே கண்டுள்ளது. 2012-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் கோலி 7 இன்னிங்ஸ்களில் சேர்த்த ரன்கள் 188. இதன் சராசரி 31.33. கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் 103 ரன்கள் எடுத்தார். இதை தவிர்த்து பார்த்தால் 6 இன்னிங்ஸ் களில் கோலி எடுத்த ரன்கள் 85 மட்டுமே.

நவீன கால கிரிக்கெட்டில் தனக்கென தனி ஒரு இடத்தை உருவாக்கியுள்ள கோலி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் கூட பம்பரமாக கூழன்று ரன் வேட்டையாடிள்ளார்.

தலைசிறந்த வீரராக தன்னை மெருகேற்றி வரும் கோலி தற்போது நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கணிசமாக ரன் குவித்து முந்தைய சோதனை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

தொடர் வெற்றிகளால் புத்துணர்ச்சியுடன் காணப்படும் கோலி சொந்த மண்ணில் இங்கிலாந் துக்கு எதிராக சிறந்த முறையில் மட்டை வீச நல்ல வாய்ப்பு கிடைத் துள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து அணி முந்தைய தொடர்களில் கோலிக்கு எதிராக எந்தவகையில் ஆதிக்கம் செலுத் தியது என்பதையும் சற்று பார்க்க வேண்டும். 9 டெஸ்ட் போட்டிகளில் ஆண்டர்சன் பந்தில் 5 முறை கோலி வீழ்ந்துள்ளார். கோலி விக்கெட்டை எந்த பந்து வீச்சாளரும் இந்த அளவுக்கு அதிகமுறை கைப்பற்றிய தில்லை. மேலும் ஆண்டர்சன் கையாண்ட தொழில்நுட்ப நுணுக்கங்களையும் மற்ற பந்து வீச்சாளர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியது கிடையாது.

இங்கிலாந்துக்கு எதிராக 16 இன்னிங்ஸ்களில் கோலி 11 முறை கேட்ச் முறையில் ஆட்டமிழந் துள்ளார். அதிலும் சிலிப் பீல்டர் மற்றும் விக்கெட் கீப்பரிடமே சரண்டராகி உள்ளார். இதற்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கையாண்ட வியூகம் ஆப் ஸ்டெம்பை ஓட்டிய பகுதியில் சிறந்த நீளத்தில் பந்துகளை வீசியதுதான். குறிப்பாக 2014 தொடரில் பல முறை குறிவைத்து வீசப்பட்ட பந்துகள் கோலியின் மட்டை விளிம்பில் பட்டு சிலிப் பீல்டரிடம் தஞ்சம் அடைந்தது.

எதிர்வரும் தொடரில் கோலிக்கு ஓர் ஆறுதலான விஷயம் என்ன வென்றால் ஆண்டர்சன் காயம் காரணமாக முதல் கட்ட போட்டி களில் விளையாடாததுதான். மேலும் கடந்த கால தொடர்களில் அச்சுறுத்திய கிரேமி ஸ்வான், மோன்டி பனேசர் போன்ற தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததும் கோலிக்கு சாதகமாக கருதப்படுகிறது.

அஸ்வின், ஜடேஜா சுழல் கூட்டணி மிரட்ட தயாராக இருக்கும் வேளையில் மட்டையில் கோலியும் தெறிக்க விட்டால் இங்கிலாந்து அணிக்கும் 5-0 என வெள்ளை அடிக்கலாம் (ஓயிட்வாஷ்).

SCROLL FOR NEXT