பட்டத்துடன் நீரஜ் சோப்ரா. 
விளையாட்டு

டைமண்ட் லீக் ஃபைனலில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்: வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

செய்திப்பிரிவு

சூரிச் (Zurich): டைமண்ட் லீக் ஃபைனலில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. விளையாட்டு உலகில் இதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் அவர். ஈட்டி எறிதல் விளையாட்டு பிரிவில் அவர் பட்டம் வென்றுள்ளார்.

24 வயதான ஹரியாணாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்திருந்தார். கடந்த ஜூலையில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றிருந்தார். காயம் காரணமாக நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் பங்கேற்கவில்லை. அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் இறுதியில் களத்திற்கு திரும்பினார்.

Lausanne டைமண்ட் லீகில் முதலிடம் பிடித்தார். அதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் 2023 மற்றும் சூரிச் டைமண்ட் லீக் ஃபைனலில் பங்கேற்று விளையாடும் தகுதியைப் பெற்றார். சூரிச் நகரில் நடைபெற்ற இறுதியில் நீரஜ் பங்கேற்று ஈட்டியை வீசினார்.

முதல் வாய்ப்பு ஃபவுலானது. அடுத்த நான்கு வாய்ப்புகளில் முறையே 88.44 மீ, 88.00 மீ, 86.11 மீ, 87.00 மீ மற்றும் 83.60 மீ தூரம் ஈட்டியை வீசி இருந்தார். அதன் மூலம் 88.44 மீட்டர் என்ற சிறந்த ஃபினிஷிங் கொடுத்து டைமண்ட் லீக் ஃபைனல் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியா சார்பில் இந்த பட்டத்தில் வேந்தருக்கு முதல் இந்தியரும் நீரஜ் டான்.

செக் குடியரசு வீரர் ஜாகுப் வடிஜேச் இதே பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் இதே பிரிவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் ஃபைனல் போன்ற போட்டிகளில் வெறும் 13 மாத இடைவெளியில் அடுத்தடுத்து பதக்கம் வென்று அசத்தியுள்ளார் நீரஜ். மூன்றாவது முறையாக அவர் டைமண்ட் லீக் ஃபைனலில் பங்கேற்று விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2017 மற்றும் 2018-ல் ஏழு மற்றும் நான்காவது இடத்தை அவர் பிடித்திருந்தார்.

SCROLL FOR NEXT