விளையாட்டு

ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை ‘டி’ பிரிவில் இடம் பெற்றது இந்திய அணி

செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையில் இந்திய அணி டி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

16 அணிகள் கலந்து கொள்ளும் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஒவ்வொரு நாடும் எந்த பிரிவில் இடம் பெறும் என்பதற்கான குலுக்கல் முறை தேர்வு நேற்று புவனேஷ்வரில் நடைபெற்றது. இதில் இந்தியா ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

காமன்வெல்த் சாம்பியனான ஆஸ்திரேலியா ‘ஏ’ பிரிவில் உள்ளது. அந்த அணியுடன் அர்ஜெண்டினா, பிரான்ஸ், சிலி அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் பெல்ஜியம், தென் கொரியா, ஜெர்மனி, ஜப்பான் அணிகள் உள்ளன. ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூஸிலாந்து, மலேசியா, சிலி அணிகள் இடம் பிடித்துள்ளன. 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை ரூர்கேலா மைதானத்திலும் நடத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT