விளையாட்டு

4-வது ஒருநாள்: 10 ஓவர்களில் 80 ரன்கள்; நியூஸி. அதிரடி தொடக்கம்

செய்திப்பிரிவு

ராஞ்சியில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் நியூஸிலாந்து அணி அதிரடி தொடக்கம் கண்டுள்ளது.

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது மார்டின் கப்தில் 34 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 43 ரன்களுடனும், டாம் லேதம் 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களுடனும் ஆடிவருகின்றனர்.

நியூஸிலாந்து அணியில் ரோங்கி, ஹென்றி இல்லை, பதிலாக டேவ்சிச், சோதி, வாட்லிங் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூஸிலாந்து அணியில் 3 ஸ்பின்னர்கள் ஆடுகின்றனர். இந்திய அணியில் பும்ரா 100% உடற்தகுதி இல்லை என்பதால் தவல் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால் தவல் குல்கர்னி போன்றவர்களுக்கு விட்டு விட்டு வாய்ப்பளிக்கப்படுவதன் பலனை இந்திய அணியும், குல்கர்னியும் அனுபவித்தனர். 2-வது ஓவரில் குல்கர்னியை 3 பவுண்டரிகளையும் அவரது அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை லேதமும் விளாசினர். 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து சொதப்பினார்.

உமேஷ் யாதவ் பந்தில் மார்டின் கப்திலுக்கு மிட் ஆனில் அமித் மிஸ்ரா டைவி அடித்து முயற்சி செய்து கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். அதனை நல்ல முயற்சி என்றே கூற வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரே ஓவரில் 12 ரன்களை விட்டுக் கொடுத்தார். உமேஷ் யாதவ் 4 ஓவர் 1 மெய்டன் 19 ரன்கள் என்று சிக்கனம் காட்டியவர் தனது அடுத்த ஓவரில் கப்தில் அடித்த இரண்டு பவுண்டரிகள் மூலம் 5 ஓவர்கள் 29 ரன்கள் என்று சிக்கனம் தவறினார்.

SCROLL FOR NEXT