மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
அபுதாபியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 452 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 224 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
456 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 108 ஓவர்களில் 322 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பிளாக்வுட் 95 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி ஷார்ஜாவில் நடைபெறுகிறது.