ஜோகன்னஸ்பர்க்: ஐசிசி ஆடவர் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முழங்கை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனான ராஸி வான் டர் டஸ்ஸன் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.
கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது ராஸி வான் டர் டஸ்ஸனின் இடது கை ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டிருந்தது.
அதே வேளையில் 22 வயதான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டிரிஸ்டன் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிலான திறனை வெளிப்படுத்தியிருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்:தெம்பா பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜ், வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.