விளையாட்டு

டி20 போட்டிகளில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் ஓய்வு

செய்திப்பிரிவு

டாக்கா: சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரஹிம் நேற்று அறிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் முஷ்பிகுர் ரஹிம். இந்நிலையில் நேற்று சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “எனக்கு 35 வயதாகி விட்டது. எனவே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இருந்தபோதும் டெஸ்ட்,ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.

அதே நேரத்தில் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன். பல்வேறு நாடுகள் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வந்தால் அதை ஏற்பேன். தொடர்ந்து டெஸ்ட், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்துவேன்" என்றார்.

SCROLL FOR NEXT