டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு இந்தியகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் கூறியதாவது: "தனது டென்னிஸ் வாழ்நாளில் சிறப்பான ஆட்டத்தால், கோடிக்கணக்கான இதயங்களை செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார். வயது என்பது உடல் உங்களுக்குச் சொல்வதல்ல, உங்கள் மனம் உடலுக்கு என்ன சொல்கிறது என்பதில்தான் இருக்கிறது.
பதின்ம வயதில் இருப்பவர்கள் உலகின் மிகப்பெரும் சவால்களைத் தீர்க்க முடியும். பெரியவர்கள் புதியவற்றை தேர்வு செய்து சிறந்து விளங்கலாம். வரம்புகளை மீறுவதற்கும் சாத்தியமற்றதை அடையவும் விளையாட்டுதான் சமூகத்தை ஊக்குவிக்கிறது. மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த டென்னிஸ் வாழ்க்கையை வாழ்ந்த செரீனா வில்லியம்ஸுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.