விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகள்: பாக். பவுலர் யாசிர் ஷா சாதனை

செய்திப்பிரிவு

மே.இ.தீவுகளுக்கு எதிராக துபாயில் நடைபெற்று வரும் பிங்க் நிறப்பந்தில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சாதனை படைத்துள்ளார்.

இவர் தனது 17-வது டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 100 விக்கெட்டுகளுக்கான 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்து வீச்சாளராகவும் யாசிர் ஷா திகழ்கிறார். இதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலிடத்தில் ஜி.ஏ.லோமான் என்ற இங்கிலாந்து வீரர் உள்ளார், இவர் 16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இன்று வரை உலக சாதனையாக இருந்து வருகிறது, இவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியது 1896-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.

அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் டர்னர், இங்கிலாந்தின் பார்ன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிரிம்மெட் ஆகியோர் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 2-ம் இடத்தில் உள்ளனர், இவர்களுடன் யாசிர் ஷா தற்போது இணைந்துள்ளார்.

18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 3-ம் இடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT