ரஞ்சி கோப்பையில் தமிழகம்-ரயில்வே அணிகள் இடையேயான ஆட்டம் பிலாஸ்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ரயில்வே அணியை 64 ஓவர்களில் 173 ரன்களுக்குள் சுருட்டியது தமிழக அணி. அதிக பட்சமாக தேவ்தார் 47, கோஷ் 46 ரன்கள் எடுத்தனர். தமிழகம் தரப்பில் நடராஜன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நேறைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் அபிநவ்முகுந்த் 98, கவுசிக் காந்தி 41 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.