பாகிஸ்தான் அணிக்கு எதிராக 60 ரன்கள் எடுத்த விராட் கோலியை ரசிகர்கள் போற்றி வருகின்றனர். அதுவும் இந்த போட்டியில் அவர் சிக்ஸர் விளாசி அரை சதம் பதிவு செய்திருந்தார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், அந்த நிலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் மோசமானது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. இருந்தும் அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சிலர் அவர் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார், பழையபடி றன் சேர்ப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
அந்த சில பேரின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார் கோலி. நடப்பு ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து வருகிறார் அவர். குறிப்பாக ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்தடுத்து அரை சதம் விளாசி இருந்தார். அதன் காரணமாக அவரை ரசிகர்கள் இப்போது போற்றி வருகின்றனர்.
அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் சிக்ஸர் விளாசி அரை சதம் பதிவு செய்திருந்தார். அவரது அசத்தலான ஆட்டமே ரசிகர்களின் பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் 44 பந்துகளில் 60 ரன்கள் பதிவு செய்திருந்தார் கோலி. இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
கோலியை ரசிகர்களின் ரசிகர்களின் ஷேரிங்ஸ்…