கல்யாண் சவுபே 
விளையாட்டு

கால்பந்து சங்க தலைவரானார் கல்யாண் சவுபே

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கால்பந்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 45 வயதான கல்யாண் சவுபே 33 வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வீரரான பாய்ச்சுங் பூட்டியாவுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் 34 மாநிலங்களைச் சேர்ந்த கால்பந்து சங்க பிரதிநிதிகள் வாக்களித்தனர்.

இந்திய சீனியர் அணியில் ஒருசில முறை இடம் பிடித்திருந்தாலும் கல்யாண் சவுபேவுக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 85 வருட இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னாள் வீரர் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

SCROLL FOR NEXT