விளையாட்டு

டிரா செய்தது கேரளா

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி - எப்சி புனே சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. இந்த கோலை அந்த அணியின் செட்ரிக் ஹெங்பார்ட் அடித்தார்.

ஜோஸூ குரியாஸ் கார்னரில் இருந்து பாக்ஸ் பகுதிக்குள் அடித்த பந்தை பெற்ற அஸ்ராக் 25 அடி தூரத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் எதிரணி வீரர் இதை தடுத் தார். அப்போது அருகில் நின்ற செட்ரிக் ஹெங்பார்ட் சாதுர்யமாக கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் கேரள அணி 1-0 என முன்னிலை பெற்றது.

68-வது நிமிடத்தில் புனே அணி பதிலடி கொடுத்தது. அந்த அணியின் சிஸ்சோகோ இந்த கோலை அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. அதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் எதும் அடிக்கப்படாததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

          
SCROLL FOR NEXT