துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர் என்று அந்த அணியின் கேப்டன் முகமது நபி கூறினார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. அந்த அணியின் கேப்டன் முகமது நபி கூறும்போது, “இந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்துவீசி எதிரணியை நிலைகுலையச் செய்தனர்” என்றார்.