சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு போலந்து வீராங் கனை அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா முன்னேறியுள்ளார்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சீனாவின் வாங் கியாங்கை எதிர்த்து போலந்து வீராங்கனையான அக்னீஸ்கா ரட்வன்ஸ்கா ஆடினார். இப்போட்டியில் ரட்வன்ஸ்கா, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை யான கிறிஸ்டினா மாடெனோவிக் 6-3, 5-7, 7-6 (7/4) என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிக்கை தோற்கடித்தார்.