லோதா கமிட்டி பரிந்துரைகள் குறித்து விவாதிக்க பிசிசிஐ சிறப்புப் பொதுக் குழு இம்மாதம் 15-ம் தேதி கூடுகிறது.
லோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருவதால், அந்த குழுவினர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
லோதா குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாத வரை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு நிதி வழங்க தடை விதித்தது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 15-ம் தேதி நடக்கவுள்ளது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக இதில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.