டச் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அஜெய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் நார்வே நாட்டை சேர்ந்த மாரியஸ் மைரேவை 21-6, 21-6 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். 16-ம் நிலை வீரரான ஜெயராம் கால் இறுதியில் பிரேசிலை சேர்ந்த யகோர் கோயல்கோ டி ஓலிவைராவை சந்திக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான காஷ்யப் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீரரான எஸ்டோனியாவின் ரவுல் மஸ்டிடம் தோல்வியடைந்தார்.