விளையாட்டு

ஹரிகா துரோணவல்லிக்கு பெண் குழந்தை

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மாமல்லபுரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.

இந்த அணியில் நிறைமாத கர்ப்பிணியாக ஹரிகா துரோணவல்லி இடம் பெற்று விளையாடினார். ஆகஸ்ட் 2-வது வாரத்தில் குழந்தை பிறக்கக்கூடும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியிருந்த நிலையிலும் ஹரிகா, செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று பதக்கம் வென்றார். இந்நிலையில் ஹைதராபாத்தில் ஹரிகாவுக்கு நேற்று முன்தினம் இரவு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதை அவர், ட்விட்டர் வாயிலாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

SCROLL FOR NEXT