ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு நாட்டின் 3-வது உயரிய விருதான பத்மபூஷண் வழங்கக் கோரி ஆந்திர அரசு, மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவின் போது ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தெலுங்கு தேச எம்பி.யும், நடிகருமான முரளி மோகன் உட்பட 22 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை மத்திய அரசுக்கு நேற்று ஆந்திர அரசு அனுப்பி வைத்தது.