விளையாட்டு

ஐஎஸ்எல்: கொல்கத்தாவுக்கு 2-வது வெற்றி

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெட்டிகோ டி கொல்கத்தா-டெல்லி டைனமோஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. 78-வது நிமிடத்தில் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணி வீரர் ஹூமி கோலாக மாற்றினார். இதனால் கொல்கத்தா 1-0 என முன்னிலைப் பெற்றது.

டெல்லி அணியால் கடைசி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் கொல்கத்தா 1-0 என வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அதேவேளையில் டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது. ஐஎஸ்எல் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-எப்சி புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT