விளையாட்டு

FTX கிரிப்டோ கோப்பை | உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா; 2-ம் இடம் பிடித்தார்

செய்திப்பிரிவு

மியாமி: ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக உலக சதுரங்க சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. இருந்தும் நடப்பு FTX கிரிப்டோ கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் அவர்.

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்ற இந்த தொடரின் 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா, கார்ல்சனை எதிர்கொண்டார். டை பிரேக்கர் முறையில் இந்த ஆட்டத்தை பிரக்ஞானந்தா வென்றார். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கார்ல்சனை அவர் வென்றிருந்தார்.

இருப்பினும் அதிக புள்ளிகள் பெற்ற காரணத்தால் கார்ல்சன் FTX கிரிப்டோ கோப்பையை வென்றார். இந்த தொடரில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரை வரிசையாக நான்கு வெற்றிகளுடன் பிரக்ஞானந்தா தொடங்கி இருந்தார். லெவன் அரோனியன், அலீரேசா, அனிஷ் கிரி, ஹான்ஸ் நீமென் போன்ற வீரர்களை அவர் அடுத்தடுத்து வென்றிருந்தார். இருப்பினும் சீனாவின் குவாங் லீம் லீ மற்றும் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா ஆகியோருக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து தோல்வியை தழுவினார். இந்நிலையில், ஏழாவது சுற்றில் கார்ல்சனை அவர் வீழ்த்தி உள்ளார்.

FIDE ரேங்கிங்கில் அவர் 89-வது இடத்தில் உள்ளார். அவரது FIDE ரேட்டிங் 2661 என உள்ளது.

SCROLL FOR NEXT