ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுநடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் இறங்குகிறது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கும், பவுலிங்கும் சிறப்பாக இருப்பதால் இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இன்று பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.