விளையாட்டு

அக்.6-ல் யு-17 உலகக்கோப்பை கால்பந்து

செய்திப்பிரிவு

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை ஜூலை 7-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. கொச்சி, நவி மும்பை, கோவா, டெல்லி, குவாஹாட்டி, கொல்கத்தா ஆகிய நகரங்கள் போட்டியை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT