விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் 5வது இடத்திற்குச் சரிந்த இங்கிலாந்து

செய்திப்பிரிவு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5ஆம் இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 0-1 என்று இழந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டியில் சமீபமாக ஆடாமலேயே பாகிஸ்தான், இங்கிலாந்து உதவியுடன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 சதங்களை அடித்த இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் இன்னும் 24 புள்ளிகளைப் பெற்றால் டாப்-10 இடத்திற்கு முன்னேறுவார். அவர் தற்போது 761 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார். விராட் கோலியின் இடத்தை அச்சுறுத்தியுள்ளார் மேத்யூஸ்.

குமார் சங்ககாரா இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி 85 ரன்கள் சராசரி வைத்துள்ளதால் 2ஆம் இடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து 7 டெஸ்ட் அரை சதங்கள் என்ற சாதனைக்கும் சங்கக்காரா சொந்தக்காரர்.

அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடம் வகிக்க, தென் ஆப்பிரிக்கா 2வது இடம் வகிக்கிறது.

ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்க இந்தியா 2வது இடம் வகிக்கிறது. டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

SCROLL FOR NEXT