விளையாட்டு

“தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” - விவாகரத்து குறித்து இந்திய வீரர் சாஹல்

செய்திப்பிரிவு

மும்பை: தனது மனைவியுடனான விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் டிசம்பர் 2020ல் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே, சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளிவந்தன.

அதனை தற்போது மறுத்துள்ளார் சாஹல். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும். அனைவருக்கும் அன்பும் வெளிச்சமும் கிடைக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சாஹல் மனைவி தனஸ்ரீ வர்மா ஒரு யூடியூபர். மேலும் டான்சராகவும் பணிபுரிந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்கள் அதிகம்.

SCROLL FOR NEXT