விளையாட்டு

இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக்

இரா.முத்துக்குமார்

முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்களிடையே 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளனர். மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் இந்தியாவுக்கு எதிராக அவர் விக்கெட்டுகளை ருசித்தாலும் ‘தான் ஒரு ஸ்பின்னர் என்று கூறிக்கொள்ளக் கூடாது” என்று கூறிவருகிறார்.

மேலும் சக்லைன் முஷ்டாக்கின் வரவு இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கும் அஸ்வின் போன்றோரை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது.

SCROLL FOR NEXT