சென்னை: சென்னையில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சென்னை ஓபன் டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னையில் 1997 முதல் ஆடவர் பங்கேற்கும் சர்வதேச ஏடிபி டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டி பின்னர் மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மகளிர் பங்கேற்கும் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு, பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்வர் ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார்.
இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டிகளை சோனி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.