விளையாட்டு

“ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் என்னை கன்னத்தில் அறைந்தார்” - சுயசரிதையில் ராஸ் டெய்லர்

செய்திப்பிரிவு

நியூஸிலாந்து: ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூஸிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் . ஓய்வு பெற்றபிறகு அவர் எழுதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. 'பிளாக் அண்ட் ஒயிட்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் டெய்லர்.

2011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது நிகழ்ந்த கசப்பான சம்பவத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். மொஹாலியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவம் அது.

"அந்தப் போட்டியில் நான் டக் அவுட் ஆனபோது 'டக் அவுட் ஆவதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் கொடுக்கவில்லை' என்று கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார். அவர் அறைந்தது கடினமாக இல்லை. மேலும், முழுக்க முழுக்க விளையாட்டுக்காக இது என்பதும் என்னால் சொல்ல முடியவில்லை. எனினும், தொழில்முறை விளையாட்டு சூழல்களில் இதுபோன்று நடந்ததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று டெய்லர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT