கேந்திர வித்யாலயா பள்ளிகள் இடையிலான 47-வது தேசிய விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு சென்னை அண்ணா நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி சார்பில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆடவருக்கான ரோப் ஸ்கிப்பிங் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகள் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜேஜே உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. 3-ம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணை செயலாளர் அருண் சுந்தர் தயாளன் கலந்து கொள்கிறார்.
போட்டிகள் ஒற்றையர், இரட்டையர், குழு, பிரீஸ்டைல், டபுள் டச் ஸ்பீடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெறுகிறது. 6-ம் தேதி காலை நடைபெறும் நிறைவு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இத்தக வலை பள்ளியின் முதல்வர் பி.வைத்திலிங்கம் தெரிவித்துள் ளார்.