சென்னை: U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வ பிரபு மும்முறை தாண்டுதலில் வெள்ளப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெற்றுள்ளார்.
இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் வெளியிட்டுள்ள பதிவில், "உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.