விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: ராணுவ சீருடையில் கம்பீரம் காட்டும் பாவ்லா

செய்திப்பிரிவு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ராணுவ சீருடையில் கொலம்பியா நாட்டு வீராங்கனை பாவ்லா ரோட்ரிக்ஸ் பங்கேற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கொலம்பியா ராணுவத்தில் லெப்டினன்ட்டாக பாவ்லா ரோட்ரிக்ஸ் பணியாற்றி வருகிறார். 15 வயதில் ராணுவத்தில் சேர்ந்த பாவ்லா, செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதல் ராணுவ சீருடையிலேயே பங்கேற்று விளையாடி வருகிறார். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 4 வெற்றி பெற்று, ஒரு ஆட்டத்தை டிரா செய்துள்ளார். 26 வயதான பாவ்லா ரோட்ரிக்ஸ் தற்போது கொலம்பியா ராணுவத்தில் தகவல் தொடர்பு அதிகாரியாக உள்ளார். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக அவருக்கு கொலம்பிய ராணுவம் சிறப்பு அனுமதியை வழங்கி உள்ளது.

SCROLL FOR NEXT