ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் எப்சி கோவா-மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் கோவா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் பெலிஸ் பினோ இந்த கோலை அடித்தார்.
இதனால் முதல் பாதியில் கோவா 1-0 என முன்னிலை வகித்தது. மும்பை அணியால் போராடியும் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் கோவா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.கோவா அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.