விளையாட்டு

CWG 2022 | தடகளத்தில் முதல் பதக்கம் - உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர்

செய்திப்பிரிவு

பர்மிங்காம்: பர்மிங்காமில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் தொடரில் உயரம் தாண்டுதலில் இந்தியா முதல் பதக்கம் வென்றுள்ளது.

இன்று நடந்த ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் 2.22 மீட்டர் தூரம் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர். 23 வயதான இவர் இதன்மூலம் இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கம் பெற்று தந்துள்ளர். இதே பிரிவில், நியூஸிலாந்தின் ஹமிஷ் கெர், 2.25 மீட்டர் தூரம் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை பெற்றார்.

இதனிடையே, சங்கர் வெண்கலம் வென்றதன் மூலம் காமன்வெல்த் தொடரில் ஆறாவது நாள் முடிவில் 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது.

SCROLL FOR NEXT