செஸ் ஒலிம்பியாட்டில் மகளிர் பிரிவில் இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது கேப் வெர்டே நாடு. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அகைன் மோரேனோவுக்கு 12 வயதே ஆகிறது. அவரது அணியில் கேட்லேன் மார்ட்டின்ஸ் (13 வயது), ஜாசிரா அல்மெய்டா (14), ஜுலியானா மோன்டெய்ரோ (16), திவானியா ஸ்பினோலா (16) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி மட்டுமே கண்டுள்ளது. 4 தோல்விகளை சந்தித்துள்ளது.