விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 2022 | தேவகோட்டை டூ ஹாங்காங்... முன்னேறும் தமிழக சிறுவன்

பெ.மாரிமுத்து

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ஹாங்காங் அணியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கண்ணப்பன் தண்ணீர்மலை இடம் பெற்றுள்ளார்.

அவரது தாய், தந்தையர் தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள். பல வருடங்களுக்கு முன்னரே ஹாங்காங் நாட்டுக்கு குடிபெயர்ந்து விட்டனர். 13 வயதான கண்ணப்பன் தண்ணீர்மலை 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தமிழில் அருமையாகவும் பேசும் கண்ணப்பன் தண்ணீர்மலை 1,699 ரேட்டிங் புள்ளிகளுடன் ஹாங்காங் அணியில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார்.

2-வது சுற்றில் களமிறக்கப்பட்ட அவர், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணி வீரர் ஸ்டான்லி டெலாவை தோற்கடித்திருந்தார். தொடர்ந்து 3-வது சுற்றில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கண்ணப்பன் தண்ணீர்மலை நேற்று 4-வது சுற்றில் அண்டோரா அணிக்கு எதிராக களமிறங்கினார். இதில் ரிபெரா வேகன்சோன்ஸ் செர்னியை எதிர்த்து விளையாடினார் கண்ணப்பன் தண்ணீர்மலை.

SCROLL FOR NEXT