விளையாட்டு

விராட் கோலி Man vs Wild சாகசத்திற்கு உகந்த நபர் - பியர் கிரில்ஸ்

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி Man vs Wild சாகசத்திற்கு பொருத்தமான நபராக இருப்பார் என அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரிட்டிஷ் நாட்டின் சாகசக்கராரான பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார்.

இருந்தும் இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். தற்போது இந்தியாவின் சர்வதேச கிரிக்கெட் அசைன்மென்டுகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பியர் கிரில்ஸ் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி உடன் இணைந்து சாகசம் மேற்கொண்டால் அற்புதமாக இருக்கும். அவரது ஸ்பிரிட்தான் அதற்கு காரணம்” என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். இவரது Man vs Wild நிகழ்ச்சி இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.

பிரதமர் மோடி, சினிமா நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ரன்வீர் சிங் போன்றவர்கள் இந்திய காடுகளில் பியர் கிரில்ஸ் உடன் Man vs Wild சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவரது அடுத்த Man vs Wild சாகச பயணத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT