இந்திய வீரர், வீராங்கனைகள் சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலம் என்று இந்திய செஸ் வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் விஷயம். தற்போது தலைமுறை சமூக ஊடகங்கள் நிறைந்த தலைமுறை. எனவே, மற்றவர்கள் சொல்வதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதை புறக்கணிக்குமாறு வீரர்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன்.
வீரர், வீராங்கனைகள் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும். பதக்கம் பெறுவோமா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்கக்கூடாது.
ஏனென்றால், அது முன்கூட்டிய கணிப்பாக இருக்கும். சொந்த மண்ணில் நமது வீரர், வீராங்கனைகள் விளையாடுவது கூடுதல் பலம்" என்றார்.