விளையாட்டு

ஃபிஃபா U17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து 2022: இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி 2022 அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா போட்டியின், 17 வயதுக்குட்பட்டோருக்கான 7வது உலகக் கோப்பை மகளிர் கால்பந்துப் போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டி பிரபலமடைவதுடன், இளைஞர்களும் இந்த விளையாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT