ஹரிகிருஷ்ணன் 
விளையாட்டு

தேசிய அளவிலான கபடி போட்டிக்கு குமாரபாளையம் வீரர் தேர்வு

செய்திப்பிரிவு

நாமக்கல்: தேசிய அளவிலான கபடி போட்டிக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த வீரர் ஹரிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவிலான 69-வது சீனியர் ஆண்கள் கபடி போட்டி ஹரியானா மாநிலத்தில் நடக்கிறது.

இதில், தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாட நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த வீரர் ஹரி கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் கிளப் அணியைச் சேர்ந்த இவர் தமிழ்நாடு அணிக்காக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பயிற்சியாளர் யுவராஜ் மற்றும் பலரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT