”நன்றி... தொடர்ந்து மிளிருங்கள், வளருங்கள்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ட்வீட் பதிவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கோலி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர் ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து பார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,709 ரன்களை எடுத்துள்ளார். இப்போது மோசமான ஃபார்ம் காரணமாக ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அதனால் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்தை எடுத்து வைத்து வருகின்றனர்.
அதில் ஒன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் பதிவிட்டர் ட்வீட். அதில் அவர், "இதுவும் கடந்து போகும். நம்பிக்கையுடன் இருங்கள் கோலி" என ட்வீட் பதிவு செய்திருந்தார். கோலிக்கு ஆதரவு தெரிவித்த பாபரின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் பாபருக்கு கோலி இன்று பதிலளித்திருக்கிறார். அதில், “ நன்றி. தொடர்ந்து மிளுருங்கள், வளருங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்து” என கோலி பதிவிட்டிருக்கிறார். கோலியின் பதிலை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.