விளையாட்டு

தடைகாலம் 4 ஆண்டுகளாக குறைப்பு: பதவியை ராஜினாமா செய்தார் பிளாட்டினி

பிடிஐ

சர்வதேச கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு இடை யில் எந்தவிதமான எழுத்து ஆவ ணங்கள் இல்லாமல் 2 மில்லி யன் சுவிஸ் பிராங்குகள் கைமாற்றப் பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிளாட்டினிக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடையானது கடந்த பிப்ரவரி மாதம் 6 வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த தடையை நீக்கக்கோரி விளையாட்டு தொடர்பான குற் றங்களை விசாரிக்கும் தீர்ப் பாயத்தில் பிளாட்டினி மேல்முறை யீடு செய்தார். இதனை நேற்று விசாரித்த தீர்ப்பாயம் பிளாட் டினிக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்க மறுத்தது.

மாறாக தண்டனை காலத்தை 4 வருடங்களாக குறைத்தது. மேலும் அபராதத் தொகையையும் 80 ஆயிரம் டாலரில் இருந்து 60 ஆயிரம் டாலராக குறைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளிவந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப் பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பிளாட்டினி.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘நடுவர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்ப்பு மூலம் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன். இந்த தடையால் என்னை தடுத்து நிறுத்த நினைக்கின்றனர். அதிர்ஷ்டம் மற்றும் நடைமுறைக்கு சாத்தியமாகும் பட்சத்தில் பிபா தலைவர் பதவிக்கான அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன்.

சுவிஸ் நீதிமன்றத்தில் எனது நேர்மையை நிருபிக்க போராடும் வகையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பதவி யை ராஜினாமா செய்கிறேன்'' என்றார்.

SCROLL FOR NEXT