விளையாட்டு

விஜேந்தர்- சோல்ட்ரா இன்று மோதல்

பிடிஐ

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் விஜேந்தர் சிங் இதுவரை தான் பங்கேற்ற 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 6-வது போட்டியில் விஜேந்தர் சிங், போலந்து நாட்டை சேர்ந்த ஆன்டர்செஜ் சோல்ட்ராவை எதிர்த்து இன்று மோதுகிறார்.

இன்றைய ஆட்டம் 8 ரவுண்டுகளை கொண்டதாக நடத்தப்படுகிறது. லண்டனில் உள்ள மேக்ரான் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை இரவு 10.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

SCROLL FOR NEXT