சாங்வான்: ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ஷாஹு துஷார் மானே ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ஷாஹு துஷார் மானே இறுதி சுற்றில் ஹங்கேரியின் எஸ்டர் மெஸ்ஸாரோஸ், இஸ்ட்வான் பென் ஜோடியை 17-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.