விளையாட்டு

சுவாரேஸ் தடை விவகாரம்: பிரேசில் கிரேட் ரொனால்டோ கருத்து

செய்திப்பிரிவு

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளில் 15 கோல்கள் அடித்து சாதனை புரிந்த பிரேசில் வீரர் ரொனால்டோ நடப்பு உலகக் கோப்பை போட்டிகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆச்சரியங்கள் நிகழ்ந்துள்ளன என்றார் அவர்.

இத்தாலி வீரர் சியெலெனியை உருகுவேயின் சுவாரேஸ் தோள்பட்டையில் கடித்ததற்காக 4 மாதங்கள் மற்றும் 9 சர்வதேசப் போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டது குறித்து அவர் கூறியதாவது:

"ஆட்டத்தில் ஒருவர் செய்யும் தவறான காரியங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்காதவர்களை தண்டிப்பதில் தவறில்லை.

என் வீட்டில் என் குழந்தைகள் என்னை சில சமயங்களில் கடிப்பதுண்டு, நான் அவர்களை அதற்காகத் தண்டித்துள்ளேன். என்று கூறிய ரொனால்டோ, இந்த உலகக் கோப்பையில் ஆட்டத்தின் தரம் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

நெய்மார் சிறந்த வீரர், மெஸ்ஸி போகப்போக முன்னேற்றம் காண்பிக்கக் கூடியவர், கோஸ்டா ரிகா உண்மையில் என்னை அதிசயப்பட வைத்த அணி.

அர்ஜென்டீனா, பிரேசில் இரு அணிகளும் மிகச்சிறப்பாக உள்ளனர். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் என்னைப் பொறுத்தவரை நெய்மார் சிறந்த வீரர்.

இவ்வாறு கூறினார் ரொனால்டோ.

SCROLL FOR NEXT